ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு

நாமக்கல், ஜூன் 8: நாமக்கல் ஒன்றியத்தில், பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார் ஆய்வு செய்தார்.வேட்டாம்பாடி, ராசாம்பாளையம் ஊராட்சிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 15வது நிதிக்குழு மாநில திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை, திட்ட இயக்குனர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். வேட்டாம்பாடி ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சமையல் கூடம் கட்டும் பணி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைவில் முடித்திட நடவடிக்கை எடுக்குமாறு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ஜெயக்குமாரன், உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், சாந்தாராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: