டெல்லி அமைச்சர் அடிசி இங்கிலாந்து செல்ல அனுமதி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: டெல்லி கல்வித்துறை அமைச்சர் அடிசி அரசுமுறை பயணமாக இங்கிலாந்து செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் கல்வி அமைச்சராக உள்ளவர் அடிசி. இவர் கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வரும் 15ம் தேதி ‘100ல் இந்தியா உலகளாவிய தலைவராக மாறுவதை நோக்கி….’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் உரையாற்ற வருமாறு அடிசிக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு டெல்லி அரசும், ஆளுநரும் ஒப்புதல் வழங்கிய நிலையில், ஒன்றிய அரசு ஒருசில கேள்விகளை கேட்டு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வந்தது. இதுதொடர்பாக அடிசி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இங்கிலாந்து பயணத்துக்கு அனுமதி அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அடிசி இங்கிலாந்து செல்ல அனுமதி தரப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

The post டெல்லி அமைச்சர் அடிசி இங்கிலாந்து செல்ல அனுமதி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: