அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி

புதுடெல்லி: நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டும் என்று ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசின் 9ம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ‘‘இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் தளங்கள், மிதக்கும் விமானதளங்கள் உட்பட 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.

தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2013-2014ம் ஆண்டில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 6 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14.5 கோடியாக அதிகரித்துள்ளது. இது 135 சதவீத அதிகரிப்பாகும். இதேபோல் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது அதாவது 4.7கோடியில் இருந்து 7 கோடியாக உயர்ந்துள்ளது. விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் மிதக்கும் விமானதளங்களின் எண்ணிக்கையானது அடுத்த 5 ஆண்டுகளில் 200 ஆக அதிகரிக்கும். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 1200 முதல் 1400 விமானங்கள் வாங்குவதற்கும் ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

The post அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: