நெல், உளுந்து உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துவரம் பருப்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக எனவும் தகவல் அளித்துள்ளனர்.

நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.143 உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சாதாரண நெல்லுக்கான ஆதரவு விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டு
குவிண்டாலுக்கு ரூ.2,183-ஆக நிர்ணயம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பாசிபருப்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.8,558-ஆக நிர்ணயம் செய்துள்ளனர். ஒரு குவிண்டால் நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு ரூ.6,620-ஆக ஒன்றிய அரசு விலை நிர்ணயித்துள்ளது.

சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560-ல் இருந்து ரூ.4,600ஆக உயர்ந்துள்ளது. நிலக்கடலைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.6,377, சூரிய காந்தி விதைக்கான விலை ரூ.6,760-ஆக நிர்ணயித்துள்ளனர். உளுந்துக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.6,950-ஆகவும் துவரம் பருப்புக்கான ஆதரவு ரூ.7,000-ஆகவும் நிர்ணயம் செத்துள்ளனர்.

நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6,620ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கேழ்வரகு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,550-ல் இருந்து ரூ.3,846ஆக அதிகரித்துள்ளது. மக்காசோளம் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,310-ல் இருந்து ரூ.2,090ஆக உயர்ந்துள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.4,350-ல் இருந்து ரூ.7,000ஆக அதிகரித்துள்ளது.

2023-24 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான காரீஃப் பயிர்களுக்கான MSPயை அதிகரிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

 

The post நெல், உளுந்து உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: