விமான தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவில் தவிக்கும் பயணிகளை மீட்க மும்பையில் இருந்து சிறப்பு விமானம்: ஏர்இந்தியா நிறுவனம்

மும்பை: விமான தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவில் தவிக்கும் பயணிகளை மீட்க ரஷ்யாவுக்கு மும்பையில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது என ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று டெல்லியிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவின் நேரடி விமானமானது எஞ்சின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சுமார் 232 பயணிகளுடன் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 216 பேர் பயணிகளாவர் மற்றும் மீதமுள்ள 16 பேர் விமானத்தின் பணிக்குழுவை சேர்ந்தவர்களாவர்.

அனைத்து பயணிகளையும் அழைத்துவருவதற்காக புதிய விமானத்தை அனுப்புவதாக ஏர்இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எஞ்சின் கோளாறு காரணமாக அனைத்து பயணிகளும் தற்காலிகமாக ஏர்இந்தியாவின் ஏற்பாட்டின் அடிப்படையில் அங்குள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் போதும் பாதுகாப்பு நடவடிக்கையை எடுப்பதற்காக ரஷ்ய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேலும் அங்குள்ள பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் மூலமாக இந்த ஏற்பாட்டை ஏர்இந்தியா நிறுவனம் செய்துள்ளது எனவும் ரஷ்யாவும் அதற்கு ஒத்துழைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விமான தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவில் தவிக்கும் பயணிகளை மீட்க மும்பையில் இருந்து சிறப்பு விமானம்: ஏர்இந்தியா நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: