2024ம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும்: சீனாவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு கப்பல்

சீனா: சீனாவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு பயண கப்பலானது பணிகள் முடிந்து கப்பல் கட்டும் இடத்தில் இருந்து வெளியேறியது. அடோரா மாஜிக் சிட்டி என்ற பெயரில் சீனாவில் மிக பெரிய பயண சொகுசு கப்பல் தயாரிக்கும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கப்பல் மோர் டூ என்றும் அழைக்கப்படுகிறது.

5 ஆண்டுகள் கட்டுமானம் நடைபெற்ற நிலையில் நேற்று ஷாங்காய் நகரில் கப்பல் கட்டும் இடத்தில் இருந்து சொகுசு கப்பலானது வெளியேறியது. கடைசி கட்ட சோதனைகள் முடிந்து இந்த அடோரா மாஜிக் சிட்டி சொகுசு கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சொகுசு கப்பலில் 2,125 அறைகள் உள்ளன. அவற்றில் ஒரே நேரத்தில் 5,246 பேர் தங்க முடியும் இது சீனாவின் கப்பல் தயாரிக்கும் பணியில் ஒரு மையில்களாக பார்க்கப்படுகிறது.

The post 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும்: சீனாவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட சொகுசு கப்பல் appeared first on Dinakaran.

Related Stories: