ேபாளூர் சம்பத்கிரி லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பிரமோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

போளூர், ஜூன் 7: போளூர் சம்பத்கிரி லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பிரமோற்சவ தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சம்பத்கிரி லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வைகாசி பிரமோற்சவம் பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 31ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி வேதமந்திரங்கள் முழங்க துவஜாரோகனம் செய்து கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் நமோ நாராயணா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். தொடர்ந்து வரும் 10 நாட்கள் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். முதல் நாள் அம்ஸா வாகனம், 2ம்நாள் சிம்ம வாகனம், 3ம் நாள் கருட சேவை காட்சி திருவீதி உலா, அனுமந்த வாகனம், 4ம்நாள் சேஷா வாகனம், 5ம் நாள் யாளி வாகனம், 6ம் நாள் யானை வாகனம், பெருமாள் ஊர்வலம் வந்தது. 7ம் நாளான நேற்று திருமஞ்சனம் திருத்தேரில் ெபருமாள் திருவீதி உலா வந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 8ம் நாளான இன்று திருக்கல்யான உற்சவம், குதிரை வாகனம், 9ம் நாள் தீர்த்தவாரி, வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம், கொடியிறக்கம், 10ம் நாள் திருமஞ்சனம், புஷ்ப பல்லக்கு செய்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். வைகாசி பிரமோற்சவ விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் மேளகச்சேரி, பரத நாட்டியம், பாட்டு கச்சேரி, பட்டிமன்றம், நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இதில் அறங்காவலர் குழு தலைவர் சீ.மதிவாணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ச.விஜயலட்சுமிசரவணன், ரா.தட்சணாமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறையும், விழாக்குழுவினரும் நகர பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

The post ேபாளூர் சம்பத்கிரி லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி பிரமோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: