₹2.29 கோடியில் தார்சாலை பணி

நாமகிரிப்பேட்டை, ஜூன் 7: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொ.ஜேடர்பாளையம், தொப்பப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொ.ஜேடர்பாளையம் முதல் பெருமாகவுண்டம்பாளையம் வழியாக, ஒடுவங்குறிச்சி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு, சுமார் ₹2.29 கோடி மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமசுவாமி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் செல்வராஜூ, தொ.ஜேடர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் இளையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் உமா பன்னீர்செல்வம், ரேவதி, ஒப்பந்ததாரர்கள் ராஜூ, சக்திவேல், திமுக கிளை செயலாளர்கள் சுப்பிரமணி, பரமசிவம், ரவி, வேல்முருகன், சின்னகன்னு, பொன்னுவேல், மணி, கோபால், அழகேசன், குமார், லட்சுமி, ராஜேந்திரன், சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹2.29 கோடியில் தார்சாலை பணி appeared first on Dinakaran.

Related Stories: