மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் பிஎஸ்எப் வீரர் பலி: மேலும் 2 பேர் காயம்

இம்பால்: மணிப்பூரில் குக்கி கிளர்ச்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி இரு வேறு பழங்குடியின சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அசாம் ரைபிள்ஸ், எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை செரோவ் உயர்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டு இருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது குகி கிளர்ச்சியாளர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும் துப்பாக்கி சண்டையில் எல்லைப்பாதுகாப்பு படைவீரர் ரஞ்சித் படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் காக்சிங்ஸ் ஜீவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் இரண்டு பேர் திமாபூரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10ம் தேதி வரை இன்டர்நெட் முடக்கம்: ணிப்பூர் கடந்த மாதம் 3ம் தேதி பிராட் பேண்ட் உட்பட இன்டர்நெட் சேவைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தடையானது வருகிற 10ம் தேதி பிற்பகல் 3மணி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

The post மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் பிஎஸ்எப் வீரர் பலி: மேலும் 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: