கர்நாடக மேலவையில் காலியாக உள்ள 3 இடத்துக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில சட்ட மேலவையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு ஜூன் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜவை சேர்ந்த எம்எல்சிக்களான லட்சுமண சவதி, ஆர்.சங்கர், பாபுராவ் சிஞ்சன்சூர் ஆகியோர் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரசில் இணைந்து போட்டியிட்டனர். இவர்களில் லட்சுமண இவர்களில் லட்சுமண் சவதி மட்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர். சங்கர் மற்றும் பாபுராவ் சிஞ்சன்சூர் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

இதற்கிடையே மேலவையில் காலியாக உள்ள இந்த 3 இடங்களுக்கு, வரும் ஜூன் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 13ம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 20 கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 21ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூன் 23 கடைசி நாளாகும். தேவைப்பட்டால் ஜூன் 30 தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். ஜூலை 4ம் தேதி தேர்தல் பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடக மேலவையில் காலியாக உள்ள 3 இடத்துக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: