4 மாநில தேர்தல் அமித்ஷா, நட்டா தொடர் ஆலோசனை

புதுடெல்லி: அடுத்து வர இருக்கும் 4 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோர் 2 நாளாக ஆலோசனை நடத்தினர். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜவிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மபி, தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரசும், மபியில் பா.ஜவும், தெலங்கானாவில் பாரதீய ராஷ்ட்ரீய சமிதியும் ஆட்சி நடத்துகிறது.

இந்த தேர்தல் குறித்து திங்கட்கிழமை இரவு மற்றும் செவ்வாய்கிழமை பா.ஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, பொதுச்செயலாளர்(அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக சில மாநிலங்களில் அமைப்பு ரீதியாக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே விரைவில் பா.ஜ பலவீனமாக உள்ள மாநிலங்களில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

The post 4 மாநில தேர்தல் அமித்ஷா, நட்டா தொடர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: