டார்க்நெட் மூலம் போதைப்பொருள் விற்பனை: 15,000 எல்எஸ்டி மாத்திரைகள் பறிமுதல், 6 பேர் கைது

புதுடெல்லி: டார்க்நெட் மூலம் கடத்தி விற்பனை செய்யப்பட்ட 15,000 எல்எஸ்டி மாத்திரைகளை பறிமுதல் செய்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், 6 பேரை கைது செய்துள்ளனர்.
பிட்காயின், கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தி டார்க்நெட் எனப்படும் ரகசிய இணையம் மூலம் போதைப்பொருள் கடத்தல், வாங்குதல் அதிகரித்துள்ளது. இந்த செயலில் ஈடுபடும் கும்பலுக்கு அமெரிக்கா, நெதர்லாந்து, போலந்து, கனடா உள்ளிட்ட வௌிநாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டார்க்வெப் மூலம் கடத்தப்பட்ட 15,000 லைசர்ஜிக் அமிலம், டைதிலாமைடு (எல்எஸ்டி) ப்ளாட் போதை மாத்திரைகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக மாணவர்கள் உள்பட 6 இளைஞர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மாத்திரைகளை கிரிட்டோ கரன்சி வாங்கிக் கொண்டு விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் கூறும்போது, “டார்க்வெப் மூலம் கடத்தப்பட்ட 15,000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரேநடவடிக்கையில் இந்த அளவுக்கு போதைப்பொருட்கள் இதுவரை பறிமுதலானது கிடையாது. இதற்குமுன் அதிகபட்சமாக கடந்த 2020ம் ஆண்டில் கொல்கத்தாவில் 5,000 ப்ளாட் மாத்திரைகளும், 2021ம் ஆண்டில் கர்நாடகாவில் 5,000 ப்ளாட் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. ” என்று தெரிவித்தார்.

The post டார்க்நெட் மூலம் போதைப்பொருள் விற்பனை: 15,000 எல்எஸ்டி மாத்திரைகள் பறிமுதல், 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: