கோவை பழமுதிர் நிலையத்தை ரூ.600 கோடிக்கு கனடா நிறுவனம் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் வாங்குவதாக தகவல்..!!

கோவை: கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை கனடாவை சேர்ந்த வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் நிறுவனம் சுமார் ரூ.600 கோடிக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், கல்லூரி ஆகிய 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி, திருப்பதி ஆகிய இடங்களிலும் கோவை பழமுதிர் நிலையம் என்ற பெயரில் கிளைகள் தொடங்கப்பட்டு சில்லறை விற்பனையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிர்வாகத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜன் ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.

இவருக்கு சொந்தமாக சென்னை அடுத்த வானகரத்தில் ஒன்றரை லட்சம் சதுர அடியிலும் கோவையில் 20,000 சதுர அடியிலும் கிடங்குகள் உள்ளன. இந்நிலையில், கோவை பழமுதிர் நிலையத்தில் 70% பங்குகளை கனடாவை சேர்ந்த வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் நிறுவனம் ரூ.550 முதல் ரூ.600 கோடி வரை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியா முழுவதும் கிளைகளை தொடங்கி வருவாய் இரட்டிப்பாக்கும் நோக்கில் கோவை பழமுதிர்நிலையம் மற்றும் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் நிறுவனம் இடையிலான இந்த ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post கோவை பழமுதிர் நிலையத்தை ரூ.600 கோடிக்கு கனடா நிறுவனம் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிட்டல் வாங்குவதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: