சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் பலி

திருமலை : ஆந்திர மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம், பத்திப்பாடு அடுத்த கொண்டேப்பாடு கிராமத்திலிருந்து 22 பேர் டிராக்டரில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்க பொன்னூறு அடுத்த ஜுப்பிடு கிராமத்திற்கு புறப்பட்டனர். அப்போது டிராக்டர் வாட்டிச்செருகூறு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே மிக்கிலியை சேர்ந்த நாகம்மா, மாங்கொடியை சேர்ந்த ஜான்சிராணி, கட்டா பகுதியை சேர்ந்த நிர்மலா, கரிகாபுடியை சேர்ந்த மேரிம்மா, ரத்னகுமாரி மற்றும் சுஹாசினி ஆகிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து எஸ்பி ஹாரிப் அபிஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தீவரி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: