பீர் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: போட்டி போட்டு பீர் பாட்டில்களை அள்ளிச் சென்ற மது பிரியர்கள்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் பீர் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நர்சிபட்டினம் என்ற இடத்தில் உள்ள மதுபான கிடங்கிலிருந்து பீர் பாட்டில்கள் சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது. காசியகோட்டா மங்களம் பையவராம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததன் காரணமாக சரக்கு வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சாலையில் கவிழ்ந்த வேனில் இருந்து பீர் பாட்டில்கள் சாலையில் கொட்டியதை அடுத்து ஓட்டுநர் கவலையில் இருந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் இதர வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியை நிறுத்தி சாலையில் சிதறப்பட்டிருந்த பீர் பாட்டில்களை போட்டி போட்டுகொண்டு அள்ளி சென்றனர். வேனில் இருந்து கீழே விழுந்து பல பாட்டில்கள் உடைந்திருந்த நிலையில் பாட்டில்கள் தங்கள் கால்களிலும், கைகளிலும் கிழித்துக்கொள்ளும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல் அந்த பீர் பாட்டில்களை எப்படி எடுத்து செல்லலாம் என்று போட்டிபோட்டு கொண்டு எடுத்து சென்றனர். போலீசார் வருவதற்குள் அந்த சரக்கு வாகனத்தில் இருந்த உடையாத பாட்டில்கள் பாதியை பொதுமக்கள் அள்ளி சென்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பீர் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: போட்டி போட்டு பீர் பாட்டில்களை அள்ளிச் சென்ற மது பிரியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: