மூணாறு பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் அரிசிக்கொம்பனின் குட்டி வாரிசுகள்-வீடியோ இணையத்தில் வைரல்

மூணாறு : கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அரிசிக்கொம்பனுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை கூட்டம் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலானது. சின்னக்கானல் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியோடு சேர்ந்துள்ள பகுதியில் பிளாஸ்டிக் உட்பட்ட உள்ள கழிவுகள் கொட்ட பட்டு வருகின்றன.

இந்நிலையில் அப் பகுதியில் கொட்ட பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அரிசிக்கொம்பனுடன் சுற்றிய காட்டு யானைகள் குட்டி உட்பட்ட உள்ள யானை கூட்டங்கள் சாப்பிடும் வீடியோ கடந்த தினம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் யானைக்கு உடல் நல குறைவு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் கழிவுகளை அப்பகுதியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூணாறு பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் அரிசிக்கொம்பனின் குட்டி வாரிசுகள்-வீடியோ இணையத்தில் வைரல் appeared first on Dinakaran.

Related Stories: