கர்நாடகாவில் அதிரடியாக உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம்; ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி ..!!

பெங்களூரு: கர்நாடகாவில் 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மின்சார கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு மேல் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் 89 காசுகள் ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 யூனிட் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் 89 காசுகள் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் பயன்படுத்தப்பட்ட மொத்த யூனிட்டிற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு யூனிட் கட்டணம் ஒரு ரூபாய் 49 பைசாவாக இருந்தது. பெரும்பாலான வீடுகளில் சராசரியாக 200 யூனிட்டுகள் மேல் பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்த விலையேற்றம் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து அந்த மாநிலத்தின் தர்பத் பகுதியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post கர்நாடகாவில் அதிரடியாக உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம்; ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி ..!! appeared first on Dinakaran.

Related Stories: