தீபம் கோ-ஆப்டெக்ஸ்சில் பழசுக்கு புதுசு பட்டு விற்பனை அடுத்தமாதம் 5ம் தேதி வரை நடக்கிறது வேலூர் அண்ணாசாலையில் உள்ள

வேலூர், ஜூன் 6: வேலூர் அண்ணாசாலையில் உள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸ்சில் பழசுக்கு புதுசு பட்டு விற்பனை அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான, கோ-ஆப்டெக்ஸ் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்டு, வேலூர் அண்ணா சாலையில் இயங்கி வரும் தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் “பட்டுத் திருவிழா” என்ற பெயரில் பழசுக்கு புதுசு சிறப்பு பட்டு விற்பனை அடுத்த மாதம் 5ம் தேதி வரையில் நடக்கிறது. இதில் புத்தம் புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், சேலம், கோவை மற்றும் மதுரை சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்கு ஈடான தொகைக்கோ அல்லது கூடுதல் தொகையை செலுத்தியோ புதிய பட்டுச் சேலைகளை 20 சதவீதம் தள்ளுபடியுடன் பெறலாம். இத்திட்டத்தின் விற்பனையை மாவட்ட கல்வி அலுவலர்கள் அங்கு லட்சுமி, தயாளன், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்கள். வேலூர் ேகா-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன், விற்பனை மேலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வேலூர் மற்றும் தீபம் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட கலந்து கொண்டனர். அடுத்த மாதம் 5ம் தேதி வரையில் நடைபெற உள்ள பழசுக்கு புதுசு பட்டு விற்பனையில், வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, வேலூருக்கு அருகாமையில் உள்ள பிற மாவட்ட வாடிக்கையாளர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள பழைய வெள்ளி ஜரிகை பட்டுச் சேலைகளின் நியாயமான மதிப்பீட்டில் புதிய பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்லலாம் என்று கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தீபம் கோ-ஆப்டெக்ஸ்சில் பழசுக்கு புதுசு பட்டு விற்பனை அடுத்தமாதம் 5ம் தேதி வரை நடக்கிறது வேலூர் அண்ணாசாலையில் உள்ள appeared first on Dinakaran.

Related Stories: