(வேலூர்) வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்தது விவசாயிகள் வேதனை கே.வி.குப்பம்

கே.வி.குப்பம், ஜூன் 6: கே.வி.குப்பம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் திங்கட்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆட்டுசந்தை நடந்தது. இதை யொட்டி கே.வி.குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழக-ஆந்திர எல்லையோர பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆடுகள் சுமார் 5 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால் வழக்கத்தைவிட நேற்று ஆடுகள் குறைவாகவே வந்ததால், வியாபாரம் மந்தமாக இருந்தது. வழக்கமாக சந்தைக்கு 700 முதல் 800 வரை ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் 200 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் வியாபாரம் மந்தமாக இருந்து. இதுதொடர்பாக ஆடுகள் விற்க வந்த விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த வாரங்களில் நடைபெற்ற சந்தையில் திருவிழா சீசன் என்பதால் ஆடுகள் வரத்தும் வியாபாரமும் ஜோராக இருந்தது. இந்த வாரம் வியாபாரம் சற்று குறைவாக இருக்கின்றது. அடுத்த வாரம் வியாபாரம் சற்று கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்’ என்று தெரிவித்தனர்.

The post (வேலூர்) வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்தது விவசாயிகள் வேதனை கே.வி.குப்பம் appeared first on Dinakaran.

Related Stories: