(வேலூர்)கிஸான் கோஸ்தி திட்டம் விழிப்புணர்வு பாலூர் ஊராட்சியில்

பேரணாம்பட்டு, ஜூன் 6:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில் நேற்றைய தினம் வேளாண்மை உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின்கீழ் கிஸான் கோஸ்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பாலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சௌந்தரராஜன் தலைமையிலும் பேரணாம்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் பொ. சுஜாதா முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் மையத்தின் பேராசிரியர் நல்லகுரும்பன் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் உலக அளவிய சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறு தானிய சாகுபடி மற்றும் அதன் பயன்களை விரிவாக வேளாண்மை உதவி இயக்குனர் எடுத்துக் கூறினார். பின்னர், விவசாய பெருமக்களுடன் சிறு தானிய விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் வேளாண்மை விரிவாக்கம் மையத்தின் இருப்பில் உள்ள இடுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

The post (வேலூர்)கிஸான் கோஸ்தி திட்டம் விழிப்புணர்வு பாலூர் ஊராட்சியில் appeared first on Dinakaran.

Related Stories: