கஞ்சா கடத்திய 3 பேர் கைது

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மணலி புதுநகர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் விச்சூர் பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக வந்த 3 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், அதில், விச்சூர் பகுதியைச் சேர்ந்த அஜித் (25), சரவணன் (27), ஜனா (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, அதனை மணலிபுதுநகர் பகுதியில் விற்க முயன்றது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: