செஞ்சி கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: செஞ்சி கிராமத்தில் புதிய மின்மாற்றியை அமைக்க வேண்டுமென கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த செஞ்சி காலனியில் 2 மின் மாற்றிகள் உள்ளன. ஒன்று 110 கேவிஏ திறன் கொண்டது. மற்றொன்று 63 கேவிஏ திறன் கொண்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ந் தேதி 110 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி பழுதடைந்துவிட்டது. எனவே 63 கேவிஏ திறன் கொண்ட மின் மாற்றியால் கிராமம் முழுவதும் போதுமான மின்சாரம் வழங்க முடியவில்லை. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அதிக மின் தேவை உள்ளது.

இந்த நிலையில் 63 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றியும் பாரம் தாங்காமல் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றது. இதனையடுத்து செஞ்சி கிராம பொதுநல சங்கம் சார்பில் தலைவர் கருணாகரன், செயலாளர் பிரகாஷ், பொதுச்செயலாளர் வில்சன், அமைப்பாளர் செஞ்சி ஜவகர் மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் செஞ்சி கிராமத்தில் புதிய 110 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றியை உடனடியாக அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதி அளித்தார்.

The post செஞ்சி கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: