ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல்; 3 பேர் பரிதாப பலி

பெரம்பலூர்: திண்டுக்கல் நாகல் நகர் குப்புசாமி(60), பேத்தி கவிப்ரியா(22) உட்பட குடும்பத்தினர் 10 பேருடன் சுற்றுலா வேனில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று விட்டு திண்டுக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  வேனை நாகல் நகரை சேர்ந்த செல்வராஜ்(48) ஓட்டினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது அதன் மீது வேன் மோதி சென்டர் மீடியனில் ஏறி நின்றது. இதில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. டிராக்டர் டிரைவர் உட்பட 3 பேர், வேனில் வந்த குப்புசாமி, கவிப்பிரியா, கணேசன்(42), நீலா(65) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் டிரைவர் ராஜேந்திரன்(45) ஸ்ட்ரெச்சரில் வைத்து ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பஸ் மோதியதில் ஆம்புலன்ஸ் பள்ளத்தில் சாய்ந்தது. அதில் ஏற்றப்பட்ட குப்புசாமி, பேத்தி கவிப்ரியா, ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் ஆகிய 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

The post ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல்; 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: