ஊத்துக்கோட்டை அருகே அரசு பள்ளிகளில் தூய்மை பணி

ஊத்துக்கோட்டை: பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஊத்துக்கோட்டை அருகே அனைத்து பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 82, நடுநிலைப்பள்ளிகள் 21, உயர்நிலை பள்ளிகள் 7, மேல்நிலைப்பள்ளிகள் 6 என மொத்தம் 116 பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகள் தேர்வு முடிந்து மே மாதம் விடுமுறை விடப்பட்டது. பின்னர், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வரும் 7ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்தது, ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டதால் மீண்டும் பள்ளி திறப்பு 12 மற்றும் 14ம்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஊராட்சி சார்பில், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வேலை உறுதிதிட்ட பணியாளர்கள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே அரசு பள்ளிகளில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: