தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் 15ல் ராஜஸ்தான் பயணம்

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இவற்றின் சட்டப்பேரவை பதவி காலம் 2024 ஜனவரிக்குள் நிறைவடைய உள்ளது. இதில் மிசோரம் மாநிலத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணை ஆணையர்கள் வரும் 15, 16ம் தேதிகளில், ராஜஸ்தான் சென்று அங்கு கள நிலவரத்தை ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் 15ல் ராஜஸ்தான் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: