தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 80 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளனர். அவர்களுக்கு போட்டித்தேர்வு தேவையில்லை என்பதுதான் அனைத்து தரப்பினரின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் அவர்களை நிலையான ஆசிரியர்களாக பணியமர்த்தி காலியிடங்களை நிரப்ப 15 நாள் போதுமானது. எனவே, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: