சட்டீஸ்கர் தத்தெடுப்பு மையத்தில் சிறுமிகளின் தலைமுடியை இழுத்து தரையில் வீசிய காப்பாளர்

கான்கர்: சட்டீஸ்கரில் உள்ள தத்தெடுப்பு மையத்தின் காப்பாளர் சிறுமிகளை அடித்து தலைமுடியை இழுத்து தரையில் வீசும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சட்டீஸ்கரில் கான்கர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் தத்தெடுப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாநில அரசு திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட அனாதை குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், அங்கு பணியாற்றும் கண்காணிப்பாளர் சீமா திவேதி சிறுமியை அடித்து துன்புறுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், சிறுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து தரையில் சீமா தூக்கி வீசுகிறார். பிறகு சிறுமியை தூக்கி கட்டிலில் வீசி விட்டு மீண்டும் அடிக்கிறார். மற்றொரு சிறுமியை அருகில் வரவழைத்து அவரையும் கட்டிலின் மீது தூக்கி வீசி அடித்து துன்புறுத்துகிறார். இதையடுத்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் திவேதி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. கான்கர் மாவட்ட புரோகிரம் அதிகாரியாக இருந்த அதிகாரியையும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

The post சட்டீஸ்கர் தத்தெடுப்பு மையத்தில் சிறுமிகளின் தலைமுடியை இழுத்து தரையில் வீசிய காப்பாளர் appeared first on Dinakaran.

Related Stories: