அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்

புதுடெல்லி: அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இதனை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க அமைச்சர் ஆஸ்டின் ஆகியோர் மானெஷா மையத்தில் சந்தித்து விவாதித்தனர். இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில்,‘‘ இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரதன்மையை பாதுகாப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவுடன் பணியாற்றுவதற்காக எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: