தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஏழுமலையான் பக்தர்கள் புனித தலத்தில் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்

*டயல் யுவர் இஓ நிகழ்ச்சியில் செயல் அதிகாரி பேச்சு

திருமலை : திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். புனித தலத்தில் பக்தர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது என டயல் யுவர் இஓ நிகழ்ச்சியில் செயல் அதிகாரி பேசினார்.திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் மாதாந்திர டயல் யுவர் இஓ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் செயல் அதிகாரி தர்மா தலைமை தாங்கி பக்தர்களிடம் இருந்து போன் மூலன் நேரடியாக புகார்கள் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினர். இதில் நாடு முழுவதிலும் இருந்து 18 வெவ்வேறு பக்தர்கள் பேசினர்.

காக்கிநாடாவை சேர்ந்த பக்தர்: ஸ்ரீவாரி சேவா சேவைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் முன்பதிவு செய்த சேவை கிடைக்கவில்லை. சேவை செய்ய ரத்து செய்தவர்கள் இடத்தில் மற்றவர்களுக்கு ஒதுக்குங்கள். செயல் அதிகாரி: உங்கள் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்யப்படும்.திருப்பதியை சேர்ந்து பக்தர்: ஏழுமலையான் கோயிலில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல் அதிகாரி: கோடை விடுமுறையால் பக்தர்கள் அதிகமாக உள்ளனர். 40 முதல் 50 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். எனவே, பக்தர்களுக்கு விரைவில் தரிசனம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்.துவ்வாடாவை சேர்ந்த பக்தர்: நான்கு மாடவீதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. கழிப்பறைகளில் புகைபிடித்தல், குட்கா உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதனை தடுக்க வேண்டும்.

செயல் அதிகாரி: திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். புனித தலத்தில் பக்தர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்: திருமலையில் பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணை வழங்க வேண்டும்.செயல் அதிகாரி: தேவஸ்தானம் சார்பில் தனி கால் சென்டர் மூலமாகவே அல்லது திருமலையில் மொபைல் எண் மூலம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

புரோட்டாட்டூரை சேர்ந்த பக்தர்: காலிகோபுரத்தில் திவ்யதரிசன டோக்கன்களை கொடுங்கள். கீழே கொடுப்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.செயல் அதிகாரி: கலிகோபுரத்தில், பக்தர்களிடையே தகராறு மற்றும் மோதல் ஏற்பட்டதால், திருப்பதி அலிபிரி பூதேவி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.சென்னையை சேர்ந்த பக்தர்: தேவஸ்தானம் வழங்கும் தங்குமிடம், தரிசனம் மற்றும் அன்னபிரசாத வசதிகள் நன்றாக உள்ளது. ஆனால் ஆர்ஜித சேவைக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

செயல் அதிகாரி: ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் முன்கூட்டியே குலுக்கல் முன்பதிவு செய்வது வழங்கப்படுகிறது. திருமலையில் குலுக்கல் முறையில் சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்.விசாகப்பட்டினத்தை சேர்ந்த பக்தர்: சுந்தரகாண்டா, பகவத் கீதை ஸ்லோக பாராயணம், யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனை மீண்டும் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.செயல் அதிகாரி: சுந்தரகாண்டம், பகவத் கீதை, யோக சாஸ்திரம் ஆகியவற்றை எப்படி அர்த்தங்களுடன் யூடியூப்பில் பெறுவது என்று அதிகாரிகள் போன் செய்து தெரிவிப்பார்கள். அதேபோல் பாகவதம் பாராயணம் செய்யவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஓங்கோலை சேர்ந்த பக்தர்: கோவிட்-19 சமயத்தில் அலிபிரியில் டிக்கெட் ஸ்கேன் செய்வதால், திருமலைக்கு வரும்போது அறைகள் கிடைக்கும். அதே நடைமுறையை அறிமுகப்படுத்துங்கள்.
செயல் அதிகாரி: கோவிட் சமயத்தில் திருமலைக்கு தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தற்போது அனைவரையும் திருமலைக்கு அனுமதிக்கிறோம். எனவே சாத்தியக்கூறுகளைப் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் வாரங்கல்லை சேர்ந்த பக்தர்: பக்தர்களுக்கு தங்கும் அறைகள் ஒதுக்கப்படும் போது, ​​வாடகை மற்றும் பாதுகாப்பு முன்வைப்புத்தொகையை யூ.பி.ஐ மூலம் செலுத்த வேண்டும் என்பதற்கு பதில் பணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். செயல் அதிகாரி: மத்திய அரசின் உத்தரவின்படி, ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கவும், ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், முன்வைப்பு தொகையை எளிதாக திருப்பித் தரவும், யூ.பி.ஐ. கட்டணத்தை ஊக்குவித்து வருகிறோம்.

பத்ராத்திரி சேர்ந்த பக்தர்: 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நபர்களுக்கும் தரிசனத்தை அனுமதிக்கவும். செயல் அதிகாரி: பக்தர்களின் விருப்பப்படி முதியோர்கள் திருமலைக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். மாறாக, ஆன்லைனில் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு வரலாம். நடக்க முடியாதவர்கள் ஸ்ரீவாரி சேவகர்கள் உதவியுடன் பயோமெட்ரிக் நுழைவு வரிசை மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வாறு விவதாங்கள் நடைபெற்றது.

The post தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஏழுமலையான் பக்தர்கள் புனித தலத்தில் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: