உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 326 பேர் சேர்ந்தனர்

 

உடுமலை, ஜூன் 5: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2-ம் தேதி துவங்கியது. இதில் பல்வேறு கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 140 மாணவர்கள் சேர்ந்தனர். தொடர்ந்து 3-ம் தேதி கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பிபிஏ பாடப்பிரிவில் 42 மாணவர்களும், பிகாம் பாடப்பிரிவில் 23 மாணவர்களும், பிகாம் சிஏ பாடப்பிரிவில் 33 மாணவர்களும்,

இகாமர்ஸ் பாடப்பிரிவில் 31 மாணவர்களும், பொருளியல் பாடப்பிரிவில் 23 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 13 மாணவர்களும் என மொத்தம் 165 மாணவ மாணவிகள் சேர்ந்தனர். சிறப்புப்பிரிவு கலந்தாய்வில் 21, பொதுப்பிரிவு கலந்தாய்வில் இருநாட்களும் சேர்த்து 305 என மொத்தமாக 326 பேர் சேர்ந்துள்ளனர். இன்றும், நாளையும் அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெறும். பங்கேற்க வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வரவேண்டும் என கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.

The post உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 326 பேர் சேர்ந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: