மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரலாக ஜஹீர் அஹ்மத் பொறுப்பேற்பு

சென்னை: மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரலாக ஜஹீர் அஹ்மத் தியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர்.புதுடெல்லியில் உள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய யுனானி ஆராய்ச்சி கழகத்தின் புதிய தலைமை இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் என்.ஜஹீர் அஹ்மத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக்தை சேர்ந்த ஒருவர் 40 ஆண்டுகால வரலாற்றில் தலைமை இயக்குநர் பதவியை அடைவது இதுவே முதல் முறை. சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் யுனானி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக ஜஹீர் அஹ்மத் பதவி வகித்து வந்தார். இவர் ராயபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரலாக ஜஹீர் அஹ்மத் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: