10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ வழக்கில் போலீஸ் வலை செய்யாறு அருகே விளையாடியபோது

செய்யாறு, ஜூன் 4: செய்யாறு அருகே தெருவில் விளையாடியபோது பைக்கில் அழைத்துச் சென்று 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திகுமார்(20). இவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருகிலுள்ள ஒரு பகுதிையை சேர்ந்த 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது சக்திகுமார், பைக்கில் செல்லலாம் என கூறி சிறுமியை அழைத்தார். இதனை நம்பிய சிறுமி பைக்கில் சென்றார். அப்போது, அங்குள்ள ஏரிக்கு சிறுமியை அழைத்து சென்ற சக்திகுமார், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறுமியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுள்ளார். இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் நேற்று முன்தினம் இரவு செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சோனியா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

The post 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ வழக்கில் போலீஸ் வலை செய்யாறு அருகே விளையாடியபோது appeared first on Dinakaran.

Related Stories: