கருணாநிதியின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல், ஜூன் 4: நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த தினத்தையொட்டி, அவரது படத்துக்கு ராஜேஸ்குமார் எம்பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா, நேற்று நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி.,மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், அவைத்தலைவர் மணிமாறன், இலக்கிய அணி தலைவர் பழனிசாமி, நகர செயலாளர்கள் பூபதி, ரானா- ஆனந்த், சிவக்குமார், நகர்மன்ற தலைவர் கலாநிதி, சட்ட திட்ட குழு உறுப்பினர் நக்கீரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் காந்தி (எ) பெரியண்ணன், ஒன்றிய செயலாளர் பழனிவேலு, மாவட்ட துணைச் செயலாளர் நலங்கிள்ளி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், சரவணன், நந்தகுமார், இளம்பரிதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பொன். சித்தார்த், கடல்அரசன்கார்த்திக் தலைமைகழக பேச்சாளர் ராஜகோaபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நாமக்கல் -சேலம் ரோட்டில் உள்ள இல்லத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், டாக்டர் இளமதி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பால்ரவி, வழக்கறிஞர் செல்வம், செல்வமணி, சத்தியபாபு, பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

The post கருணாநிதியின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: