வங்கதேசத்தை சேர்ந்தவர் சிக்கினார்

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. கோயில் அருகே சரவணப் பொய்கையில் சுற்றித்திரிந்த வாலிபரை நேற்று போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வங்கதேசத்தின் போக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மூசா கரிமுல்லா (37) என்பதும், அத்துமீறி இந்தியாவிற்குள் நடந்தே வந்துள்ளார். இங்கு பல்வேறு பகுதிகளுக்கும் ரயில், பஸ்களில் சென்றுள்ளார் என்பதும், அவரிடம் இந்திய வரைபடமும், ஒரு கடிதமும் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post வங்கதேசத்தை சேர்ந்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: