பிரதமர், ரயில்வே அமைச்சரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன: மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

ஒடிசாவில் நடந்த பயங்கரமான ரயில் விபத்து குறித்து அறிந்ததும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உடனடியாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஒடிசா பொறுப்பாளர் செல்ல குமார் ஆகியோரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்யவும், நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தி உள்ளார்.

விபத்து குறித்து கார்கே கூறுகையில்:
இந்த விபத்து எப்படி நடந்தது, யார் பொறுப்பு என்பதை நான் பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். ரயில்வே வரலாற்றில் நடக்காத இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இப்போது ஒன்றுபட்டு ஒன்றிய அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவ வேண்டிய நேரம் இது என்பதால் பின்னர் விவாதிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

The post பிரதமர், ரயில்வே அமைச்சரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன: மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: