ஜெர்மனியில் உள்ள குழந்தையை இந்தியாவிடம் ஒப்படைக்க 59 எம்பிக்கள் கடிதம்

புதுடெல்லி: ஜெர்மனியின் குழந்தைகள் உரிமைக் காப்பகத்தில் உள்ள இரண்டரை வயது பெண் குழந்தையை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட 19 கட்சி எம்பிக்கள் ஜெர்மன் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். குஜராத்தை சேர்ந்த பவேஷ் ஷா ஜெர்மனியில் தன் மனைவி தாரா ஷா மற்றும் பெண் குழந்தை அரிஹா ஷாவுடன் வசித்து வந்தார்.

2021ம் ஆண்டு பெண் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதால், பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஜெர்மனி குழந்தைகள் நல காப்பகம் குழந்தையை தங்கள் பராமரிப்பில் வளர்த்து வந்தனர். இதனிடையே, பவேஷ், தாரா ஷா தம்பதி இந்தியாவுக்கு திரும்பி வந்தனர்.

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவில்லை என அறிக்கை வௌியிட்டதையடுத்து, பெண் குழந்தையின் நலன் கருதி அதனை உடனே இந்தியாவில் உள்ள பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசி தரூர், பாஜவை சேர்ந்த ஹேமமாலினி, மேனகா காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா உள்பட 19 கட்சிகளை சேர்ந்த 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெர்மன் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். குழந்தையை மீட்க உரிய நடவடிக்கைஎடுத்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.

The post ஜெர்மனியில் உள்ள குழந்தையை இந்தியாவிடம் ஒப்படைக்க 59 எம்பிக்கள் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: