மற்றொரு அவதூறு வழக்கு ராகுலுக்கு எதிராக 7 ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிப்பு

தானே: ஆர்எஸ்எஸ்க்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு எதிராக புதிதாக 7 ஆதாரங்களுக்கான ஆவணங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த பேரணியின்போது மகாத்மா காந்தியின் படுகொலையில் ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்ததாக கூறப்படுகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எல்சி வாடிகர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, புகார்தாரரான ராஜேஷ் குன்டே, ராகுல்காந்தி பேசிய வீடியோ பதிவை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

மேலும் ராகுலுக்கு எதிரான ஆதாரங்களின் 7 புதிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. மேலும் ராகுலுக்கு எதிரான ராஜேஷ் குன்டேவின் வாக்குமூலத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post மற்றொரு அவதூறு வழக்கு ராகுலுக்கு எதிராக 7 ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: