வேலூர் மாவட்ட காவல்துறையில் ‘சாரா’ பெண் மோப்ப நாய் சேர்ப்பு

வேலூர்: வேலூர் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் ‘சாரா’ என்ற பெண் மோப்ப நாய் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் பிரிவுக்கு சாரா என்ற புதிய பெண் மோப்ப நாய் கடந்த ஆண்டு வாங்கப்பட்டது. இது வேலூரில் 6 மாத கால அடிப்படை பயிற்சி முடித்ததும், சென்னை பரங்கிமலையில் போலீஸ் மோப்ப நாய் பிரிவு தலைமையகத்தில் 6 மாதங்கள் நவீன பயிற்சிகளை பெற்றது. இப்பயிற்சி முடித்து நேற்று பெண் மோப்ப நாய் சாராவுடன் வேலூர் எஸ்பி மணிவண்ணனிடம் அதன் பயிற்சியாளர்கள் ஆஜராகினர்.

எஸ்பியிடம் பெண் மோப்ப நாய் சாரா சிறப்பு நவீன பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் சாரா, மோப்ப நாய் பிரிவில் பணியில் சேர்க்கப்பட்டது. இனி சாரா வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாவட்ட காவல்துறையில் ‘சாரா’ பெண் மோப்ப நாய் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: