ஒடிசா ரயில் விபத்து: பெரிய அலட்சியம் இருந்தது; ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள்: லாலுபிரசாத் யாதவ் குற்றச்சாட்டு

ஒடிசா: ஒடிசா மாநிலம் பால்சோர் அருகே பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டையே உறைய வைத்த இந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட 16 மணி நேரத்திற்கு மேலாக துரிதமாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து உடல்கள் கண்டெடுக்கப்படுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என பேரிடர் மீட்பு படை தெரிவித்திருந்தது. இந்நிலையில், விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ரயில் விபத்து தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்; மிக பெரிய அலட்சியத்தால்தான் கோர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. பெரிய அலட்சியம் இருந்தது; ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள். உயர்மட்ட விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணமானவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும். என்று லாலுபிரசாத் யாதவ் கூறினார்.

The post ஒடிசா ரயில் விபத்து: பெரிய அலட்சியம் இருந்தது; ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள்: லாலுபிரசாத் யாதவ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: