ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அடுத்த புதூர் பாண்டியாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி பார்வதி (32). இவர் கச்சேரி தளவாய்புரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில நர்சாக பணி புரிந்து வந்தார். சமீபத்தில் இவரது 6 வயது பெண் குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்து விட்டது. இதனால் அவர், மனவேதனையில் இருந்துள்ளார்.
எப்போதும் தனது குழந்தையின் நினைப்பிலேயே இருந்து வந்த பார்வதி நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மகள் இறந்த துக்கத்தில் நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.