மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: பல பேருக்கு மறுவாழ்வு

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மதியழகன்(53). இவரது மனைவி விஜயலெட்சுமி. மதியழகன் மன்னார்குடி அசேஷம் பகுதியில் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். மதியழகன் கடந்த 31ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ நாகை என்ற இடத்தில் எதிரே வந்த மற்றொரு பைக் மதியழகன் பைக் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து டாக்டர்கள், மதியழகனின் மனைவி விஜயலெட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானம் பற்றி விளக்கி கூறினர். இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட குடும்பத்தினர், மதியழகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர். அதனை தொடர்ந்து அவரது 2 கண்கள், 2 சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், கணையம் ஆகிய உடல் உறுப்புகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனால் பலபேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

The post மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: பல பேருக்கு மறுவாழ்வு appeared first on Dinakaran.

Related Stories: