ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல்: திணறும் வாகன ஓட்டிகள்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ளதால் இந்த பகுதி வழியாக சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா ஆகிய பகுதிகளுக்கும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் பஸ், கனரக வாகனங்ளும் ஒரு தினமும் நூற்றுக்கணக்கில் வந்து செல்கிறது. இதன்காரணமாக தினமும் ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.

‘’ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஆந்திர பகுதியில் இருந்தும் மக்கள் வாகனங்களில் வருவதால் ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விசேஷ நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வேறு ஊர்களுக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசார் இல்லை. எனவே ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்’ என்றனர்.

The post ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல்: திணறும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: