ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே செல்லும் 48 ரயில்கள் இதுவரை ரத்து: 39 ரயில்களும் மாற்றுப் பாதையில் இயக்கம்

புபனேஷ்வர்: ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே செல்லும் 48 ரயில்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ர யில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே செல்லும் 48 ரயில்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹவுரா – பூரி (13837), ஹவுரா – பெங்களூரு (12863), ஹவுரா – சென்னை மெயில் (12839), சாலிமர் – பூரி (12895), சாலிமர் – சம்பல்பூர் (20831), சந்திரகாச்சி – பூரி (02837), சீல்டா – பூரி துரந்தோ (22201) விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 5.50-க்கு புறப்பட இருந்த கன்னியாகுமரி – ஹவுரா வாராந்திர அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – கோரமண்டல் கொல்கத்தா விரைவு ரயில் (12842), கன்னியாகுமரி – ஹவுரா விரைவு ரயில் (12666) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. யஷ்வந்த்பூர் – ஹவுரா ரயில் (12863), ஹவுரா – சென்னை சென்ட்ரல் (12839) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில் (12245), யஷ்வந்த்பூர் – தமக்கையா விரைவு ரயில் (12551), யஷ்வந்த்பூர் – பகல்பூர் ஹாங்கா ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விபத்து நேரிட்ட பகுதி வழியே செல்லும் 39 ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. குறுகிய தொலைவு செல்லும் 10 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

The post ரயில் விபத்தையடுத்து ஒடிசா வழியே செல்லும் 48 ரயில்கள் இதுவரை ரத்து: 39 ரயில்களும் மாற்றுப் பாதையில் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: