பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு மனித உரிமைகள் பிரிவு போலீசார் ஏற்பாடு குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில்

வேலூர், ஜூன் 3: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் நடத்தினர். வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் நேற்று குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி எம்.டி.இருதயராஜ் தலைமையில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் போலீசார் தட்டப்பாறை கிராமத்தில் சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம், மனித உரிமைகள், எஸ்சி மற்றும் எஸ்டி திட்டங்களை பற்றியும் இணையதள குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

அதில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்வது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, இணையதளம் மூலம் நடைபெறும் குற்றச்செயல்கள், எஸ்சிஎஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமை என பல்வேறு குற்றச்செயல்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறைக்கு உடனே தகவல் அளிக்கும் வகையில் உள்ள இலவச உதவி எண்கள் பற்றியும் விளக்கியதுடன், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய துண்டு பிரசுரங்களையும் மக்களிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பெண்களும் கலந்துக் கொண்டனர்.

The post பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு மனித உரிமைகள் பிரிவு போலீசார் ஏற்பாடு குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் appeared first on Dinakaran.

Related Stories: