(தி.மலை-15)இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பு குழு கூட்டம் ¬கீழ்பென்னாத்தூரில்

கீழ்பென்னாத்தூர், ஜூன் 3: கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பு குறித்த ஆலோசனைகள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த 2 அடுக்கு அமைப்பு கொண்ட குழு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 6 வயது முதல் 18 வயதுடைய அனைத்து பள்ளி செல்லா மாணவர்களை 100சதவீதம் பள்ளியில் சேர்ப்பது, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதில் திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் வந்து கூட்டத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், பேரூராட்சி தலைவர் சரவணன், திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை-15)இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பு குழு கூட்டம் ¬கீழ்பென்னாத்தூரில் appeared first on Dinakaran.

Related Stories: