திருக்கல்யாண உற்சவம்

திருச்செங்கோடு, ஜூன் 3: திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத்தேர் திருவிழா கடந்த 25ம் தேதி திருமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலைக்கோயிலில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளி நகருக்குள் ஊர்வலமாக வந்த திருவிழா 4ம் நாள் விமரிசையாக நடந்தது. 9ம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோயில், சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அர்ஜூனன், அருணா சங்கர், கொத்துகாரர் அன்பரசன், ஊர்கவுண்டர் ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள், திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிகயிறு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் விசாக நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

The post திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: