₹4.92 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, ஜூன் 3: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில், நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 66 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ₹2.22 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானது. முதல்தரம் கிலோ ₹72.75 முதல் ₹80 வரையிலும், இரண்டாம் தரம் ₹55.75 முதல் ₹68.65 வரையிலும் விற்பனையானது. இதேபோல், மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 75 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கொப்பரையை கொள்முதல் செய்ய ஈரோடு, சேலம், காங்கேயம், நாமக்கல் ஆகிய பகுதிகள் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். முதல் தரம் ₹70.75 முதல் ₹76.90 வரையிலும், இரண்டாம் தரம் ₹52.25 முதல் ₹60.05 வரையிலும் என மொத்தம் ₹2.70 லட்சத்துக்கு விற்பனையானது.

The post ₹4.92 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: