The post ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்து இளம்பெண்ணுக்கு பாஜ, விசிக நிர்வாகிகள் மிரட்டல் appeared first on Dinakaran.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன் மனைவி அபிநயா (34). இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் பால் பண்ணை வைத்து மாத வாடகை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டனுக்கு பணம் தேவைப்பட்டதால், 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பேசி ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் ஒப்பந்தம் போடாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களாக மாட்டு பண்ணை நடத்தி வந்த நிலையில் திடீரென வீரகேரளத்தை சேர்ந்த நிர்மலா, விசிகவை சேர்ந்த பாலசிங்கம் மற்றும் பாஜ மண்டல தலைவர் கவிதா ஆகியோர் போன் மூலமும், நேரிலும் அபிநயாவை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து அபிநயா அளித்த புகாரின்பேரில், பாலசிங்கம், கவிதா, நிர்மலா ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்து இளம்பெண்ணுக்கு பாஜ, விசிக நிர்வாகிகள் மிரட்டல் appeared first on Dinakaran.