பள்ளி ஆசிரியை பலாத்காரம் தொழிலதிபர் மீது போலீஸ் வழக்கு

கோவை: கோவை கோட்டைமேட்டை சேர்ந்தவர் 37 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசிக்கும் இவர் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருடன் பள்ளியில் பணியாற்றும் சரவணம்பட்டியை சேர்ந்த சக ஆசிரியை ஒருவர் மூலமாக வடவள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் (42) என்கிற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் நெருங்கி பழகினர். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக கூறி சந்தோஷ்குமார் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆசிரியையிடம் இருந்து பல்வேறு காலங்களில் ரூ.25 லட்சம் பணத்தை தொழிலதிபர் பெற்று மோசடி செய்து மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து ஆசிரியை அளித்த புகாரின்பேரில், சந்தோஷ்குமார் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பள்ளி ஆசிரியை பலாத்காரம் தொழிலதிபர் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: