ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

ராஞ்சி: டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் ஆகியோர் நேற்று காலை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி வந்தனர். அங்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுடன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் முதல்வர் பகவந்த் ஆகியோர் ஆலோசனை நடத்தி ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினார்கள்.

The post ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: